CBI மத்திய புலனாய்வு பணியகம், தற்போது Assistant Library and Information, Lecturer (Law), Lecturer (Criminology), Dy. Advisor போன்ற பணிகளுக்கு உள்ள காலியிடங்களை தகுதியான நபர்கள் கொண்டு நிரப்ப போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
CBI வேலைவாய்ப்பு:
மத்திய புலனாய்வு பணியகத்தில், Assistant Library and Information, Lecturer (Law), Lecturer(Criminology), Dy. Advisor பணிகளுக்கென்று 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக CBI அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 56 ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் Post Graduate, Bachelor degree மற்றும் Diploma ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கென்று தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு level-07 cpc matrix, level-10 cpc matrix என்ற அளவின் கீழ் ரூ.9300/- முதல் ரூ.39,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இப்பணிகளுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு இறுதித் தேதி முடிவதற்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.