National Payments Corporation of India நிறுவனம், Java Developer, Senior Associate, Monitoring & Control ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
NPCI நிறுவன வேலைவாய்ப்பு:
NPCI நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Java Developer, Senior Associate, Monitoring & Control உள்ளிட்ட பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் B.Tech, B.E, M.Tech போன்ற பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணி சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 முதல் 7 ஆண்டுகள் பணியாற்றியவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு தகுதி வாய்ந்தவர்கள் Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.