இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியானது Director, Office Assistant போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.
Central Bank of India-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
இந்திய அரசின் பொதுத்துறை வங்கியான Central Bank of India வங்கியில் இருந்து தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Director, Office Assistant போன்ற பதவிகளுக்காக பல்வேறு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் திறமையான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் குறைந்தபட்ச வயதானது 18 முதல் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Director பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 65 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் கல்வி நிலையத்தில் BSW/BA/B.COM, UG / PG என பணிக்கு தொடர்புடைய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வங்கியால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.12,000 முதல் ரூ.25,000 வரை ஊதியமாக வழங்கப்படுகிறது.
Director, Office Assistant போன்ற பணிகளுக்கு தனிப்பட்ட நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் மேற்கண்ட தகுதிகளை பெற்ற இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ பக்கத்தில் உள்ள முகவரிக்கு 27.02.2023 என்ற தேதிக்குள் அனுப்பி விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.