காபி போர்டு நிறுவனம், System Engineer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
காபி போர்டு வேலைவாய்ப்பு:
காபி போர்டு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, System Engineer பணிக்கு என்று ஒரே ஒரு காலியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதுக்கு குறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் B.Sc (Agri) with PG Diploma in computer application அல்லது Masters in Computer Applications தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.40,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Coding and Scripting Skills, Analytical skills, lnformation security, Good communication skills and the ability to network போன்ற திறன்களை கொண்டிருப்பது அவசியம்.
System Engineer பணிக்கு தகுதியுடைய நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ddmr.coffeeboard@pmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.