Bureau of Indian standards (BIS) நிறுவனமானது மேலாண்மை அமைப்பு சான்றிதழ் துறையில் Young professionals பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இப்பணி தொடர்பான கூடுதல் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள் :
இந்திய தரநிலை நிறுவனமானது (BIS) மேலாண்மை அமைப்பு சான்றிதழ் துறையில்(MSCD) Young professionals பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்காக மொத்தமாக 22 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள் இருப்பவராக இருப்பது கட்டாயம்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10வது ,12வது வகுப்பு தேர்ச்சியுடன் B.E/B.Tech, MBA போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றிருக்கவேண்டும் .இப்பணிக்கு தேர்நதெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் 70,000 ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.