Bharat Coking Coal Limited (BCCL) நிறுவனமானது Advisor பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 03.02.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு விவரங்கள் :
பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (BCCL) நிறுவனமானது ஆலோசகர் பணிக்கான வேலைவாய்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்காக 1 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 65 ஆக இருப்பது அவசியம். வயது வரம்பில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு ரூ.37,500 முதல் ரூ.1,20,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பெற்ற விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்ட்டுள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்பி ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்படிவத்துடன் தொடர்புடைய தகுந்த ஆவணங்களுடன் gmee.bccl@coalindia என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 03.02.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேதிக்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.