6 ஆம் வகுப்பு தமிழ் – முதல் பருவம் – பாடக்குறிப்புகள்:
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
- ஏற்றத் தாழ்வற்ற ————-அமைய வேண்டும்.
அ. சமூகம்
ஆ. நாடு
இ. வீடு
ஈ. தெரு
- நாள் முழுவதும் வேலைசெய்து களைத்தவருக்கு ———-ஆக இருக்கும்.
அ.மகிழ்ச்சி
ஆ. கோபம்
இ.வருத்தம்
ஈ. அசதி
- நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்—–
அ. நிலயென்று
ஆ. நிலவென்று
இ. நிலவன்று
ஈ. நிலவு என்று
- தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்—–
அ.தமிழங்கள்
ஆ. தமிழெங்கள்
இ. தமிழுங்கள்
ஈ. தமிழ் எங்கள்
- அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ. அமுது + தென்று
ஆ. அமுது + என்று
இ. அமுது + ஒன்று
ஈ. அமு + தென்று
- செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ. செம்மை + பயிர்
ஆ. செம் + பயிர்
இ. செமை + பயிர்
ஈ. செம்பு + பயிர்
- ————-அமுதென்று பேர்
அ. தமிழிற்கு
ஆ. தமிழுக்கு
ஈ. தமிழுக்கே
- தமிழ் நமது இளமைக்குக் காரணமான ——— போன்றது
அ. தேன்
ஆ. நெய்
இ. நெல்
ஈ. பால்
- தமிழ்மொழி, புலவர்களுக்கு ——— போன்றது
அ. அம்பு
ஆ. கேடயம்
இ.வாள்
ஈ. வேல்
- நமது சோர்வை நீக்குவதில் தமிழ் ———– போன்றது
அ. சோறு
ஆ. தேன்
இ. நீர்
ஈ. பால்
- தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதிமிக்க. ——–ஆகும்.
அ. அணிகலம்
ஆ. கவசம்
இ. வாள்
ஈ. வேல்
- ‘மணமென்று’ என்பதைப் பிரித்து எழுதுக.
அ. மணம் + என்று
ஆ. மணம் + ஒன்று
இ. மண + மென்று
ஈ. மணம் + மென்று
பொருத்துக:
1. வாழ்வுக்கு – அ. வாள்
2.உயர்வுக்கு – ஆ. ஊர்க
3.விதைக்கு- இ. வான்
விடை: ஆ, இ, அ.
- விளைவுக்கு – அ. பால்
- அறிவுக்கு – ஆ. வேல்
- இளமைக்கு – இ. நீர்
- புலவர்க்கு – ஈ. தோள்.
விடை: இ, ஈ, அ, ஆ.
III. ஒத்த ஓசையில் முடியும் (இயைபுச்) சொற்களை எடுத்து எழுதுக:
- பேர் – நேர்
- பேர் – நீர்
- பேர் – ஊர்
- பால் – வேல்
- வான் – தேன்
- தேள் – வாள்
தமிழ்க்கும்மி:
-
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தாய் மொழியில் படித்தால் —— அடையலாம்.
அ. பன்மை
ஆ. மேன்மை
இ. பொறுமை
ஈ. சிறுமை
- தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் —– சுருங்கிவிட்டது.
அ. மேதினி
ஆ. நிலா
இ. வானம்
ஈ. காற்று
- செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது —–
அ. செந் + தமிழ்
ஆ. செம் + தமிழ்
இ.சென்மை + தமிழ்
ஈ. செம்மை + தமிழ்
- பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது —–
அ. பொய் + அகற்றும்
ஆ. பொய் + கற்றும்
இ. பொய்ய + கற்றும்
ஈ. பொய் + யகற்றும்
- பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது —–
அ. பாட்டிருக்கும்
ஆ. பாட்டுருக்கும்
இ.பாடிருக்கும்
ஈ.பாடியிருக்கும்
- எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது —-
அ. எட்டுத்திசை
ஆ. எட்டிதிசை
இ.எட்டுதிசை
ஈ. எட்டி இசை
- திசைகள் ——- செந்தமிழின் புகழ் பரவ வேண்டும்.
அ.இரண்டிலும்
ஆ. எட்டிலும்
இ. நான்கிலும்
ஈ.பத்திலும்
- ——- சிறந்து வாழ்வதற்கான வழிகாட்டு முறைகள் கொண்டது தமிழ்.
அ. உலகம்
ஆ. ஊர்
இ. தெரு
ஈ. நாடு
- கொட்டுங்கடி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ——
அ. கொட்டுங்கள் + அடி
ஆ. கொட்டும் + கடி
இ. கொட்டு + உங்களடி
ஈ. கொட்டு + உங்கள் + அடி
- வழிகாட்டிருக்கும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது——-
அ. வழிகாட்டி + இருக்கும்
ஆ. வழிகாட்டு + இருக்கும்
இ. வழி + காட்டிருக்கும்
ஈ. வழிகள் + காட்டி + இருக்கும்
- இளமை + கோதையர் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது ——–
அ. இளங்கோதையர்
ஆ. இளம் கோதையர்
இ. இளகோதையர்
ஈ. இளமைக் கோதையர்
- பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ——-
அ. பாட்டுவிருக்கும்
ஆ. பாட்டிலிருக்கும்
இ. பாடல் இருக்கும்
ஈ. பாட்டிருக்கும்
நயம் உணர்ந்து எழுதுக:
1. பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து எழுதுக.
எட்டுத்திசை – எட்டிடவே.
- பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக.
கொட்டுங்கடி – எட்டுத்திசை.
வளர் தமிழ்:
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
- “தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் ——
அ. புதுமை
ஆ. பழமை
இ. பெருமை
ஈ. சீர்மை.
- ‘இடப்புறம்’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ——
அ. இடன் + புறம்
ஆ. இடது + புறம்
இ. இட + புறம்
ஈ. இடம் + புறம்
- ‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ——
அ. சீர் + இளமை
ஆ. சீர்மை + இளமை
இ. சீரி + இளமை
ஈ. சீற் + இளமை
- சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ——
அ. சிலம்பதிகாரம்
ஆ. சிலப்பதிகாரம்
இ.சிலம்புதிகாரம்
ஈ.சிலபதிகாரம்
- கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ——–
அ. கணினி தமிழ்
ஆ. கணினித்தமிழ்
இ. கணினிதமிழ்
ஈ. கணிணிதமிழ்
- ‘தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடியவர் ————-
அ. கண்ணதாசன்
ஆ. பாரதியார்
இ. பாரதிதாசன்
ஈ. வாணிதாசன்
- ‘மா’ என்னும் சொல்லின் பொருள் ————
அ. மாடம்
ஆ. வானம்
இ. விலங்கு
ஈ. அம்மா
- ‘சீர்மை’ என்னும் சொல்லின் பொருள் ———–
அ. தொன்மை
ஆ. புதுமை
இ. ஒழுங்குமுறை
ஈ. பழமை
- ‘வலஞ்சுழி’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்
அ. வலன் + சுழி
ஆ. வலது + சுழி
இ. வல + சுழி
ஈ. வலம் + சுழி
- ‘யாமறிந்த மொழிகளிலே’ என்பதில் ‘யாமறிந்த’ என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ——
அ. யா + மறிந்த
ஆ. யாம் + மறிந்த
இ. யாம் + அறிந்த
ஈ.யாம + அறிந்த
- இனிது + ஆவது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ——
அ. இனிதாவது
ஆ. இனித்தாவது
இ. இனிதவாது
ஈ.இனிதுவாது
- மூன்று + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ——
அ. மூத்தமிழ்
ஆ. முத்தமிழ்
இ. முத்துத்தமிழ்
ஈ. மூதமிழ்
- ‘என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்’ எனப் பாடியவர் –—-
அ. கண்ணதாசன்
ஆ. பாரதியார்
இ. பாரதிதாசன்
ஈ. வாணிதாசன்
- ‘மா’ என்னும் சொல்லின் பொருள் ———-
அ. இதழ்
ஆ. திகழ்
இ. துகள்
ஈ. பகல்
கோடிட்ட இடத்தை நிரப்புக:
- இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும்
- ‘தமிழன்’ என்னும் சொல் அப்பர் தேவாரத்தில் இடம் பெற்றுள்ளது.
- உலகில் எழுத்து வடிவம் பெறாத மொழிகள் பல உள்ளன.
- நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிபடுத்தவும் உதவுவது மொழி.
- தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.
- மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
தமிழ் எழுத்துகளின் வகை தொகை:
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
எழுத்து:
ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.
உயிர் எழுத்துகள்:
உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன. வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளைக் குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் ‘அ’ முதல் ‘ஔ’ வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன.
மாத்திரை:
மாத்திரை என்பது இங்கு கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.
- குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 1 மாத்திரை
- நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 2 மாத்திரை
மெய்யெழுத்துகள்:
மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம்,ய்,ர்,ல்,வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டு மெய்யெழுத்துக்களாகும்.
- மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்
- இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்
- வல்லினம்: க், ச், ட், த், ப், ற்
மெய் எழுத்துகள் ஒலிக்கும் காலஅளவு – அரை மாத்திரை.
உயிர்மெய்:
- மெய் எழுத்துக்கள் பதினெட்டும் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றுபவை உயிர்மெய் எழுத்துகள்:
- மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் உயிர்மெய் குறில் தோன்றுகிறது.மெய்யுடன் உயிர்நெடில் சேர்ந்தால் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது. ஆகவே உயிர்மெய் எழுத்துகளையும் உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம்.
ஆய்த எழுத்து:
- தமிழ்மொழியில் உயிர்மெய் எழுத்துகள் தவிர தனி எழுத்து ஒன்றும் உள்ளது. அது ஃ என்னும் ஆய்த எழுத்தாகும்.
- ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு அரைமாத்திரை