செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி, தற்போது Jeep Driver பணிக்கு என்று நான்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விரைவாக இறுதி நாள் முடியும் முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
TNRD Chengalpattu வேலைவாய்ப்பு:
TNRD Chengalpattu வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Jeep Driver பணிக்கென நான்கு காலியிடங்கள் இருப்பதாக கூறியிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 42 வரை இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும் மற்றும் 05 ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்கான அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. Jeep Driver பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மாதம் ரூ.19,5000/- முதல் ரூ.62,000/- வரை சம்பளம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
TNRD Chengalpattu பணிக்கு ஆட்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்தின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.