தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் Ophthalmic Assistant பணிக்கு 93 காலியிடங்கள் உள்ளதால் அவ்விடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விரைவாக இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன்பெறவும்.
MRB வாரியம் வேலைவாய்ப்பு:
Ophthalmic Assistant பணிக்கு 93 காலியிடங்கள் இருப்பதால் அதை நிரப்ப வேண்டி, மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயதானது குறைந்தபட்சம் 18 என்றும், அதிகபட்சமாக 60 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரிகளில் Two year diploma in Optometry OR Ophthalmic Assistant course போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் இப்பணிக்கென தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ..35,400/- முதல் ரூ.1,12,400/- வரை சம்பளம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Ophthalmic Assistant பணிக்கு தகுதியுள்ள நபர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப படிவ கட்டணமாக SC / SCA / ST / DAP(PH) / DW பிரிவினருக்கு ரூ.300/- , மற்றவருக்கு ரூ.600/- வசூலிக்கப்படும் மற்றும் விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மூலமாக 09/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.