SBI மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தற்போது, Assistant Manager பதவிக்கு என ஒரே ஒரு காலியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு CA முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி குறித்த கூடுதல் தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
SBI அறிவித்த வேலைவாய்ப்பு:
தற்போது Assistant Manager பதவிக்கு ஒரே ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, SBI மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் உள்துறை தணிக்கையில் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இப்பதவிக்கு விண்ணப்பிப்போர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் மற்றும் Asst. Manager பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் அளிக்கப்படும்.
மேலும் இந்த பதவிக்கு தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.