RITES நிறுவனம் தற்போது Alignment Engineer, Planning and scheduling Expert system, Chief Resident Engineer உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிகளுக்கென 9 காலியிடங்கள் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
RITES நிறுவன வேலைவாய்ப்பு:
தற்போது RITES நிறுவனம் Alignment Engineer, Planning and scheduling Expert system,Architect, Chief Resident Engineer,Lifts & Escalators & others போன்ற பணிகளுக்கு 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு 01/02/2023 தேதியின் படி, 63 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Electrical, Mechanical அல்லது Civil பாடப்பிரிவில் Graduate முடித்திருக்க வேண்டும். RITES நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதன் நகலை அறிவிப்பில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு இறுதித்தேதி முடிவதற்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.