Repco Home Finance நிறுவனமானது Assistant Manager/ Executive/ Trainee போன்ற பதவிகளுக்கான பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணி குறித்த கூடுதல் தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .
வேலைவாய்ப்பு விவரங்கள் :
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனமானது Assistant Manager/ Executive/ Trainee/ Manager / Senior Manager/ Officer on Special Duty போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த பதவிக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 01.01.2023 தேதி அன்று குறைந்தபட்சமாக 28 லிருந்து அதிகபட்சமாக 65 வரை இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் B.Com / Diploma /Graduate / Post-graduate-ல் 50% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட பதவிகளுக்கு தகுதியான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு ரூ.12,500, ரூ.21700, ரூ.40,000, ரூ.49800 என அவர்களின் பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே கூறிய தகுதி உடைய நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் மேலும் 10.02.2023, 02.02.2023 மற்றும் 04.02.2023 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.