ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப பிரைவேட் லிமிடெட் (REBIT), Manager / Sr.Manager Procurement பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதால் அவ்விடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணி குறித்த தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
REBIT வேலைவாய்ப்பு:
REBIT நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில், Manager / Sr.Manager Procurement பணிகளுக்கு பல காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிட்டு கொள்ளவும்.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Bachelor’s Degree, engineering, Master Degree in Management போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணியில் குறைந்தது 10 முதல் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
குறிப்பாக, Manager பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்படுகிறது.