மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC), Project Officer பணிக்காக உள்ள ஒரே ஒரு காலியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக இறுதி நாள் முடியும் முன் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்படுகிறது.
CDAC நிறுவன வேலைவாய்ப்பு:
CDAC நிறுவனத்தில் Project Officer பணிக்கான ஒரே ஒரு காலியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது அதிகபட்சம் 55 ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் MBA , Post-Graduate ( Business Management / Business Administration / Marketing / IT ) ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Project Officer பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.4.6 லட்சம் ஆண்டு ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
CDAC நிறுவன பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேற்கண்ட தகுதிகளை கொண்ட நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 01/03/2023 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.