PGIMER ஆராய்ச்சி நிறுவனமானது Senior/Junior Demonstrator பணிக்கு ஒரே ஒரு காலியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் விரைவாக இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
PGIMER நிறுவன வேலைவாய்ப்பு:
Senior/Junior Demonstrator பணிக்கென ஒரே ஒரு காலியிடம் மட்டும் இருப்பதாக PGIMER நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 45 ஆக இருக்க வேண்டும் மற்றும் வயது வரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறையில் M.Sc/ Ph.D முடித்திருத்தல் வேண்டும் மற்றும் Demonstrator பணிக்கென்று தேர்ந்தெடுப்பவர்களுக்கு மாத ஊதியம் PGIMER விதிமுறையின்படி அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
PGIMER நிறுவன பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக நியமனம் செய்யப்பட உள்ளனர். மேற்கண்ட தகுதிகளை கொண்ட நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24/02/2023 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் தகுந்த சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.