The National Institute of Food Technology Entrepreneurship and Management ஆணையம், தற்போது Assistant Accounts Officer பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விரைவாக இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.
NIFTEM வேலைவாய்ப்பு:
NIFTEM வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Assistant Accounts Officer பணிக்கென்று ஒரே ஒரு காலியிடம் மட்டும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு அதிகபட்சமாக 56 இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்கள் நடத்தும் SAS தேர்வு அல்லது அதற்கு சமமான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். Assistant Accounts Officer பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் Pay Matrix is Level-7 அளவின் கீழ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
NIFTEM பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறையில் நியமனம் செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவம் பெற்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விரைந்து அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.