NPCIL-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
NPCIL நிறுவனத்தில் காலியாக உள்ள Nurse பணிக்கு 26 காலிப்பணியிடங்களும், Pathology Lab Technician பணிக்கு 3 காலிப்பணியிடங்களும், Pharmacist பணிக்கு 4 காலிப்பணியிடங்களும், Stipendiary Trainee/Dental Technician பணிக்கு 1 காலிப்பணியிடமும், X-Ray technician பணிக்கு 1 காலிப்பணியிடமும், Plant Operator & Other Post பணிக்கு 158 காலிப்பணியிடங்களும் என மொத்தமாக 193 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு திறமை மற்றும் தகுதி வாய்ந்த நபர்களின் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு அவர்களின் பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அல்லது எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க மேற்கண்ட தகுதிகளை பெற்ற ஆர்வம் உள்ள நபர்கள் www.npcil.nic.in என்ற அதிகாரபூர்வ பக்கத்திற்கு சென்று விவரங்களை பூர்த்தி செய்த பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள “Apply Online” இணைப்பின் மூலம் ஆன்லைனில் 28-02-2023 என்ற தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.