தற்போது NHPC நிறுவனம், Apprentice பணிக்கு ITI, Diploma மற்றும் Engineering போன்ற துறைகளில் காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பிப்ரவரி 10 தேதிக்குள் விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
NHPC நிறுவன வேலைவாய்ப்பு:
தற்போது NHPC நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ITI Apprentice – 41 காலியிடங்கள், Diploma Apprenticeship – 14 காலியிடங்கள் மற்றும் Graduate Apprenticeship (Nursing) – 02 காலியிடங்கள் என்று மொத்தம் 57 காலியிடங்கள் உள்ளதாக கூறியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வரை இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ITI Apprentice பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வாரியத்தில் ITI தேர்ச்சி பெற்றவராகவும், Diploma Apprenticeship பணிக்கு அரசு சார்ந்த கல்வி நிலையங்களில் AICTE , Diploma In Engineering அல்லது Technical Education ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராகவும், Graduate Apprenticeship பணிக்கு Graduate பட்டம் முடித்தவராகவும் இருக்க வேண்டும். இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணியினை பொறுத்து மாத ஊதியம் வழங்கப்படும்.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அவர்களின் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களை பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பிப்ரவரி 10ம் தேதிக்குள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.