கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட்(KRCL) நிறுவனமானது தற்போது Chief Mechanical Engineer/ Project பதவிக்கான 1 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான முடிவை எடுத்து, வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் தாமதிக்காமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ரயில்வே நிர்வாக வேலைவாய்ப்பு விவரங்கள் :
வேலை தேடும் நபர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக தற்போது KCRL நிறுவனமானது தனது நிர்வாகத்தில் காலியாக உள்ள Chief Mechanical Engineer/ Project போன்ற பதவிகளுக்கான 1 காலிப்பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு, தகுந்த பணியாளர்களை கொண்டு பணியிடத்தை நிரப்ப உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது அதிகபட்சமாக 55 வயதினராக இருக்க வேண்டும்.
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் B.E தேர்ச்சியுடன் IRSME officer ஆக PML 14 of 7th CPC அளவில் ஊதியம் பெறுபவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு அவர்களின் பணியின் அடிப்படையிலும் திறமை மற்றும் தகுதியின் அடிப்படையிலும் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கூறிய தகுதிகளை பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு பிரதிநிதித்துவம் (deputation) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்த பின்பு dycpo.shailesh@krcl.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் அதாவது 16.02.2023 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.