மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சுகாதார சங்கத்தில், Medical Officer, Supporting Staff மற்றும் Health Inspector ஆகிய பணிகளுக்காக உள்ள காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
NHM வேலைவாய்ப்பு:
Medical Officer, Supporting Staff மற்றும் Health Inspector போன்ற பணிகளுக்கு மூன்று பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட சுகாதார சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 40 மற்றும் 50 ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8 மற்றும் 12 ஆம் வகுப்பு மற்றும் MBBS பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு மாத ஊதியம் Supporting Staff பணிக்கு ரூ.8,500/-, Health Inspector பணிக்கு ரூ.14,000/- மற்றும் Medical Officer பணிக்கு ரூ.60,000/- வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு தகுதியானவர்கள் Contract அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அலுவலக முகவரிக்கு போதிய ஆவணங்களுடன் 19/02/2023 தேதி முடிவதற்குள் தபால் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.