தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC), தற்போது Chief Architect, General Manager/ Architect, Addl.General Manager/ Architect, Sr. Dy. General Manager/ Architect, Dy. General Manager/ Architect உள்ளிட்ட பணிகளுக்காக உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
NCRTC வேலைவாய்ப்பு:
NCRTC ஆணையம், Chief Architect, General Manager/ Architect, Addl.General Manager/ Architect, Sr. Dy. General Manager/ Architect, Dy. General Manager/ Architect போன்ற பணிகளுக்கென்று உள்ள 8 காலியிடங்களை நிரப்புமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு பணியின் அடிப்படையில் அதிகபட்சம் 45, 50 மற்றும் 55 இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் B.Arch தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிப்பவர்கள் பணி சார்ந்த துறையில் 8 முதல் 20 ஆண்டுகள் பணியாற்றியவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத ஊதியம் ரூ.70,000/- முதல் ரூ.2,80,000/- வரை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு தகுதி வாய்ந்தவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27/02/2023 என்ற தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.