Nabfins நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Customer Service Officer ( CSO ) பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்ப போவதாக கூறியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
Nabfins வேலைவாய்ப்பு:
Nabfins நிறுவனம், தற்போது Customer Service Officer (CSO ) பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சமாக 30 ஆக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 , 12 ம் வகுப்பு மற்றும் PUC படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிப்பவர்கள் முறையான ஓட்டுநர் உரிமத்துடன் டூவீலர் வைத்திருப்பது அவசியமாகும்.
CSO பணிக்கு தகுதியானவர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் இறுதி தேதி முடியும் முன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.