பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate / Diploma Apprentice போன்ற பதவிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 66 காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு காலியிடங்களை நிரப்ப இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
BPCL-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
BPCL நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate / Diploma Apprentice போன்ற பதவிகளில் கீழ் உள்ள பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இதில் Graduate Apprentice பணிக்கு 14 காலிப்பணியிடங்களும், Diploma Apprentice பணிக்கு 52 காலிப்பணியிடங்கள் என மொத்தமாக 66 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு திறமை மற்றும் தகுதியான நபர்களை கொண்டு காலியிடம் நிரப்பப்பட உள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் B.E, B.Tech, BSc, B.Com, Diploma என பணிக்கு தொடர்புடைய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அவர்களின் பணியின் அடிப்படையில் ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை ஊதியமாக வழங்கப்படுகிறது.
Graduate / Diploma Apprentice பணிகளுக்கு விண்ணப்பிக்கும் மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு நேர்முகத்தேர்விற்கு பின்பு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை நிரப்பி ஆன்லைனில் 08.02.2023 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.