MRVC வேலைவாய்ப்பு:
தற்போது Deputy Chief Project Manager, Deputy Chief Signal &Tele Communication Engineer ஆகிய பணிகளுக்கான காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப MRVC நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு இரண்டு காலியிடங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 55 மற்றும் 56 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் SG / JAG Officer பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும் மற்றும் இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் Parent Pay உடன் Deputation Allowance சேர்த்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு நபர்கள் தகுதியின் அடிப்படையில் (Deputation) தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31/03/2023 தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.