புதுச்சேரியில் உள்ள JIPMER ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Financial Advisor, Controller of Examination போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.
JIPMER-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றான JIPMER ஆராய்ச்சி நிறுவனமானது Senior Financial Advisor, Controller of Examination போன்ற பதவிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 2 காலிப்பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் மூலம் சிறந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்பட்ட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் அதிகபட்சமான வயது 56 என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் PG டிகிரி தேர்ச்சியும், மத்திய, மாநில அரசு அதிகாரியாக Level 11 மற்றும் 12 அளவிலான ஊதியம் பெறுபவர்களாக இருப்பவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கு JIPMER நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.78,800 முதல் ரூ.2,15,900 வரை வழங்கப்படுகிறது.
மேலும் இப்பணிக்கு மேற்கண்ட தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க மேற்கூறிய தகுதிகளை பெற்ற நபர்கள் அறிவிப்பில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்த பின்பு, அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 20.03.2023 என்ற தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.