சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், தற்போது Chief Vigilance Officer, GM, AGM ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் இப்பணிகளுக்கு மூன்று காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. விண்ணப்பிப்பவர்கள் விரைவாக இந்த பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.
CMRL வேலைவாய்ப்பு :
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, Chief Vigilance Officer, GM, AGM போன்ற பணிகளுக்கு மூன்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணி சார்ந்த துறையில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிப்பவர்கள் பணியை சேர்ந்த பிரிவில் 17 முதல் 20 ஆண்டுகள் வரை பணியாற்றியவராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation மற்றும் Contract முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 24/02/2023 தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.