National Institute of Traditional Medicine (ICMR ) ஆணையம், Scientist-B, Statistical Assistant, Psychologist, Field Investigator உள்ளிட்ட பணிகளுக்காக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள நபர்கள் விரைவாக இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறவும்.
ICMR வேலைவாய்ப்பு:
National Institute of Traditional Medicine (ICMR ) ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், Scientist-B, Statistical Assistant, Psychologist, Field Investigator ஆகிய பணிகளுக்கு 5 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு அதிகபட்சமாக 30 லிருந்து 35 க்குள் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் MBBS, MD மற்றும் பணி சார்ந்த பிரிவில் Degree, Master’s degree முடித்திருக்க வேண்டும் மற்றும் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.31,000/- முதல் ரூ.61,000/- வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 14/02/2023 தேதி முடிவதற்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது