இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் உள்ள ROHC(S) ஆணையத்தில் Project Technician – III பணிக்கான காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறவும்.
ICMR வேலைவாய்ப்பு:
ICMR நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Project Technician – III பணிக்கென ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது அதிகபட்சமாக 30 ஆக இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் 12 ஆம் வகுப்பு, Diploma அல்லது B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.18,000/- வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Project Technician – III பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து rohcbng@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பிப்ரவரி 25ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.