ICMR நிறுவனம், தற்போது Senior Research Fellow ( SRF ) பணிக்கு காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனவே விண்ணப்பிக்க தகுதியுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
ICMR வேலைவாய்ப்பு:
தற்போது ICMR நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Senior Research Fellow (SRF) பணிக்கு ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 35 என்று அறிவித்துள்ளது. வயது வரம்பு தளர்வுகளை பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் Bioinformatics, Computational, Biology பாடப்பிரிவுகளில் M.Sc அல்லது M.Tech முடித்திருக்க வேண்டும் மற்றும் பணி சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SRF பணிக்கு தகுதியான நபர்கள் 01/03/2023 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்கு 27/02/2023 தேதிக்குள் சென்று சேரும்படி அனுப்பி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.