இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில், தற்போது Junior Research Fellow, Junior Project Fellow, Project Assistant பணிக்கென 20 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் ICFRE ஆணையத்தின் பணி குறித்த தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
ICFRE வேலைவாய்ப்பு:
ICFRE வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Junior Research Fellow, Junior Project Fellow, Project Assistant உள்ளிட்ட பணிகளுக்கு 20 காலியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயதானது அதிகபட்சம் 28 ஆக இருக்கவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ICFRE பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் பணி சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் BSc, MSc, M.Tech, PhD என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இப்பணிகளுக்கென தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் பணியை பொறுத்து ரூ.19,000/- முதல் ரூ.31,000/- வரை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.