ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், Visiting Consultant பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் பணி குறித்த தகவல்களுக்கு கீழே பார்வையிடவும்.
HAL நிறுவன வேலைவாய்ப்பு:
Visiting Consultant பணிக்கென்று காலியாக உள்ள இடங்களை நிரப்பும் படி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பானது அதிகபட்சம் 65 ஆக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் MBBS, DM / DNB ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.5,000/- ஊதியமாக அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Visiting Consultant பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு தபால் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது மேலும் விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி நாள் 22/02/2023 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.