Group Centre Of CRPF ஆணையம் தற்போது, Headmistress மற்றும் Teacher பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் பணி குறித்த தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
CRPF ஆணைய வேலைவாய்ப்பு:
தற்போது Headmistress, Teacher மற்றும் Ayahs உள்ளிட்ட பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதால் அதை நிரப்ப வேண்டி Group Centre Of CRPF ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு பற்றி அறிய அறிவிப்பை காணவும்.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Ayahs பணிக்கு 5 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், Headmistress, Teacher பணிக்கு Graduate with Nursing Training முடித்திருக்க வேண்டும் மற்றும் பணியில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.6,000 முதல் ரூ.9,000 வரை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இப்பணிகளுக்கு தகுதியுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் 25/02/2023 என்ற தேதிக்குள் சேருமாறு அலுவலக முகவரிக்கு தபால் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.