தென்காசி மாவட்டத்தில் மாவட்ட மேலாண்மை துறையில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் போன்ற பதவிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 18 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மாவட்ட மேலாண்மை துறையின் வேலைவாய்ப்பு விவரங்கள்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் மாவட்ட மேலாண்மை துறையில் காலியாக உள்ள 18 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மாவட்ட மேலாண்மை துறையானது அறிவித்து, இந்த அறிவிப்பின் மூலமாக வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் போன்ற பதவிகளுக்கு திறமை வாய்ந்த பணியாளர்களை கொண்டு பணியமர்த்த உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 28 ஆக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சியுடன் கூடிய MS Office-ல் 3 முதல் 6 மாத கால சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் திறமைக்கேற்ப பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பதவிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். மேற்கண்ட தகுதிகளை பெற்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்த பின், அதிகாரப் பூர்வ பக்கத்தில் உள்ள முகவரிக்கு 15.02.2023 என்ற தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.