திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பிரிவில், சமூக பணியாளர் பணிக்கு ஒரே ஒரு காலியிடம் உள்ளதால் ஒப்பந்த முறையில் அதனை நிரப்பிட தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணிக்கு தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமூக பணியாளர் வேலைவாய்ப்பு:
சமூக பணியாளர் பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அரசு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சமூகவியல் மற்றும் சமூகப்பணி குறித்த பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.18,536/- வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட தகுதிகளை கொண்ட நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 28/02/2023 என்ற இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பம் மற்றும் தகுந்த சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்படுகிறது.