DHS வேலைவாய்ப்பு:
நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார சங்கத்தில், தற்போது மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாக District Health Society அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மருத்துவ அலுவலர் பணிக்கு 2 காலியிடங்கள், சுகாதார ஆய்வாளர் பணிக்கு 2 காலியிடங்கள், Health Worker/ Support Staff பணிக்கு 2 காலியிடங்கள் என்று மொத்தம் 6 பணியிடங்கள் உள்ளன.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணியை பொறுத்து 8th, 10th, 12th மற்றும் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மருத்துவ அலுவலர் பணிக்கு ரூ.60,000/-, சுகாதார ஆய்வாளர் பணிக்கு ரூ.14,000/- மற்றும் Health Worker/ Support Staff பணிக்கு ரூ.8,500/- மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த பணிகளுக்கு தகுதியுள்ளவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 16/02/2023 தேதி முடிவதற்குள் தகுந்த சான்றிதழ்களுடன் அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.