தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சுகாதார சங்கம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் MLHP மற்றும் Staff Nurse பணிக்கு 85 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு நர்சிங் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பவர்கள் இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சுகாதார சங்கத்தில் ( Dharmapuri DPS ) Staff Nurse மற்றும் MLHP பணிகளுக்கு 86 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் நர்சிங் மற்றும் DGNM பிரிவில் B.Sc படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அவர்களின் திறமையை பொறுத்து மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் பணிக்கு தகுதியுள்ள நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், சுகாதார சங்க பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும், வரும் ஜனவரி 27ம் தேதிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.