பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் உள்ள DESIDOC மையத்தில் 2023-2024 ம் ஆண்டிற்கான ஓராண்டு பயிற்சிக்கான Apprentices பதவிக்காக 21 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
DRDO DESIDOC-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
DRDO-ன் கீழ் இயங்கும் பாதுகாப்பு அறிவியல் தகவல் & ஆவண மையத்தில் (DESIDOC) நடைபெறும் ஓராண்டு பயிற்சிக்காக 21 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டு Apprentices பதவிக்காக DRDO அமைப்பு பணியமர்த்த உள்ளது. இப்பணி குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளவும்.
அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் Library and Information Science டிகிரி / 2 வருட டிப்ளமோ Library and Information Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இந்த Apprentices பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.8000 முதல் ரூ.9000 வரையிலான உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் முதற்கட்டமாக தகுதியின் அடிப்படையிலும், இரண்டாம் கட்டமாக நேர்காணல் மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்த பின்பு, அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.