தற்போது CSB வங்கி, Marketing Head பணிக்கு ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டும் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
CSB வங்கி வேலைவாய்ப்பு:
CSB வங்கி, Marketing Head பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate முடித்திருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 15 முதல் 17 ஆண்டுகள் பணியில் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் மற்றும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Marketing Head பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் 18/03/2023 தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.