இந்திய மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி RSETI களுக்கு ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் Director பதவிக்கான காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டு திறமை வாய்ந்த நபர்களை கொண்டு காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
Central Bank of India வேலைவாய்ப்பு விவரங்கள் :
Central Bank of India-வில் தற்போது காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களில் RSETI DIRECTOR பதவிக்கான திறமை வாய்ந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளனர். மேலும் இந்த பணிக்கு அதிகபட்சமாக 65 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் UG/PG இதில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வங்கி சார்ந்த துறைகளில் 15 முதல் 20 வருட பணி அனுபவமும், கிராமப்புற கிளையில் ஏதேனும் ஒரு கிளை மேலாளராக பணிபுரிந்திருக்க வேண்டும், உள்ளூர் மொழி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஓய்வு பெறும் போது அவர் பணிபுரிந்த அளவு / தரத்தின் அளவுகளை கொண்டு ஊதியம் வழங்கப்படுகிறது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க மேற்கண்ட தகுதிகளை பெற்ற ஆர்வம் உள்ள தனிப்பட்ட நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அதிகார அறிவிப்பில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். பின்பு அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 15.02.2023 தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.