பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேட் லிமிடெட் தற்போது Graduate Apprentices , Diploma Apprentices போன்ற பிரிவுகளை சேர்ந்த துறைகளில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் கல்வித்தகுதி, வயது வரம்பு போன்ற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பாரத் நிறுவன வேலைவாய்ப்பு:
தற்போது பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேட் லிமிடெட் வெளியிட்ட அறிவிப்பின்படி, Graduate Apprentices மற்றும் Diploma Apprentices ஆகிய பிரிவுகளை சேர்ந்த Fire&Safety ,Quality Assurance, Process, Electrical மற்றும் Civil உள்ளிட்ட துறைகளில் 66 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் BE, B.Tech, B.Sc, B.Com அல்லது பணி சார்ந்த துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் .
மேலும் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 01.01.2023 தேதியின் படி, 18 வயது முதல் 27 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும். இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக பணியினை பொறுத்து ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் Qualifying Exam மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 08 /02 /2023 தேதிக்குள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.