மத்திய அரசு நிறுவனமான, பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 27 பணியிடங்களில், Monitor பதவிக்கு தகுதி பெற்ற நபர்களை பணிக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
BECIL நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது காலியாக உள்ள 27 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக BECIL நிறுவனமானது Monitor பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்து திறமை வாய்ந்த பணியாளர்களை கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. மேலும் வயது வரம்பு மற்றும் தளர்வுகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் Monitor பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சியுடன் ஊடகம் / செய்தித் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.28,635 ஊதியமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் தங்களின் புதுப்பிக்கப்பட்ட பயோடேட்டா, கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவச் சான்றிதழ்களுடன் hrsection@becil.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.01.2023 க்குள் அனுப்பி விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.