AI AIRPORT SERVICES LIMITED நிறுவனத்தில் காலியாக உள்ள Jr. Customer, Customer Service Executive போன்ற பதவிகளுக்காக மொத்தம் 166 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு திறமை வாய்ந்த பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு காலியிடம் நிரப்பப் பட உள்ளது.
AI AIRPORT SERVICES-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது AI AIRPORT SERVICES நிறுவனத்தில் காலியாக உள்ள 166 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இந்நிறுவனமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் மூலம் Customer Service Executive பணிக்கு 11 காலிப்பணியிடங்களும், Jr. Customer Service Executive பணிக்கு 25 காலிப்பணியிடங்களும், Utility Agent Cum Ramp Driver பணிக்கு 7 காலிப்பணியிடங்களும், Handy women பணிக்கு 45 காலிப்பணியிடங்களும், Handyman பணிக்கு 36 காலிப்பணியிடங்களும், Handyman (Cleaners) பணிக்கு 20 காலிப்பணியிடங்களும், Duty Officer பணிக்கு 6 காலிப்பணியிடங்களும், Jr. Officer Technical பணிக்கு 4 காலிப்பணியிடங்களும், Jr. Officer Technical பணிக்கு 12 காலிப்பணியிடங்களும் ஒதுக்கப்பட்டு திறமை வாய்ந்த நபர்கள் மூலம் காலியிடம் நிரப்ப பட உள்ளது. மேலும் Duty Officer பணிக்கு 50 வயதாகவும், Jr. Officer Passenger பணிக்கு 35 வயதாகவும், இதர பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது அதிகபட்சமாக 28 வயதாகவும் இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ பக்கத்தைப் பார்வையிடவும்.
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ஆம் வகுப்பு ,12ஆம் வகுப்பு தேர்ச்சி, MBA, B.E, Diploma in IATA-UFTAA அல்லது IATA FIATA அல்லது IATA-DGR அல்லது IATA போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் Customer Service Executive பணிக்கு Rs.21,300 ஊதியமும், Jr.Customer Service Executive மற்றும் Utility Agent Cum Driver பணிக்கு Rs.19,350 ஊதியமும், Handyman/ Handyman(Cleaners)/Handy women பணிக்கு Rs.17,520 ஊதியமும், Duty Officer பணிக்கு Rs.32,200 ஊதியமும், Jr. Officer Technical மற்றும் Jr. Officer Technical பணிக்கு Rs.25,300 ஊதியமும் வழங்கப்படுகிறது.
இப்பணிக்கு Personal/Virtual Interview மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கு ரூ.500 கட்டணம் செலுத்தி ( Ex- servicemen / SC/ST பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை) 01.02.2023 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.