TNUSRB உதவி ஆய்வாளர் (SI) தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெறலாம்.
ஆன்லைன் மாதிரி தேர்வு:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு போட்டி தேர்வுகளும் நடைபெறவில்லை. மேலும் அரசு தேர்வுகளுக்காக தயாராகி வருபவர்கள் தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது கொரோனா தாக்கம் சற்று கட்டுக்குள் வந்து உள்ளதால் பல்வேறு வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. மேலும் அரசு போட்டித் தேர்வுக்கான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை நேற்று மாலை தேர்வாணைய தலைவர் வெளியிட்டார்.
இந்நிலையில் தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு போன்ற சீருடை சேவைகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) செயல்பட்டு வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில் காலியாக 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கடந்த 8ம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வுக்கு விண்ணப்பதாரர் மார்ச் 8 முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்கள், காவல்துறையில் பணியாற்றுபவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தேர்வுக்கு இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இந்த நிலையில் அனைத்து தேர்வர்களும் போட்டி தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி TNUSRB – SI தேர்வுக்கான முந்தைய ஆண்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் SI தேர்வுக்கான உளவியல் பாட பகுதிக்கான கேள்விகளை கொண்ட மாதிரி தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. இதை தேர்வர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TNUSRB -SI Practice Test 17(Psychology)
Mock Test “WhatsApp Group” Join Now