TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பதவி வாரியாக காலிப்பணியிடங்கள்!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பதவி வாரியாக காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி அதற்கான விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பதவி வாரியாக உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
குரூப் 4 & VAO:
தமிழக அரசு துறையில் இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு TNPSC தேர்வாணையம் குரூப் 4 & VAO தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் இத்தேர்வை எழுதுகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக குரூப் 4 & VAO தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது பாதிப்புகள் குறைந்து மக்கள் வேலை வாய்ப்புகளை தேடி வரும் நிலையில் TNPSC தேர்வுகள் நடத்த தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – தீபக் சாஹர் கிடைக்க வாய்ப்பு? ஷாக்கிங் தகவல்!
இதனையடுத்து தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி குரூப்4&VAO தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியது. அரசுத்துறைகளில் ஆரம்ப நிலை பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
இத்தேர்வை எழுத விரும்புவோர் இதற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பு ஆகும். குரூப்4 தேர்வு ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். அதில் பொது அறிவில் 75 வினாக்கள், திறனறிவு பகுதியில் 25 வினாக்கள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
TNPSC குரூப் 4 & VAO காலிப்பணியிடங்கள்:
- கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) – 274
- இளநிலை உதவியாளர் – 3,681
- பில் கலெக்டர் – 50
- தட்டச்சர் – 2,108
- சுருக்கெழுத்து தட்டச்சர் – 1,024
- ஸ்டோர் கீப்பர் – 1
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |