TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – தவறாமல் படிங்க!
TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – தவறாமல் படிங்க!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 தேர்வு ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் முழு சிலபஸையும் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, சிலபஸை எங்கு டவுன்லோடு செய்வது என்பது பற்றிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
குரூப் 4
குரூப் 4 தேர்வில் 200 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும். முதல் பகுதியில் 100 வினாக்கள் கேட்கப்படும்.100 மதிப்பெண்கள் 40 மதிப்பெண்கள் பெறுவது தகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழ் மொழிப் பாடப் பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும். பொது அறிவுப் பகுதியை பொறுத்தவரை 100 வினாக்களில் 75- பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு வினாக்கள் கேட்கப்படும். அறிவியல் பாடப்பகுதியில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல், நடப்பு நிகழ்வுகள் பாட பிரிவில் வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல் மற்றும் சில கேட்கப்படும். புவியியல் பாடப் பகுதியில் புவி மற்றும் பிரபஞ்சம், சூரியக் குடும்பம், பருவ காற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள் மற்றும் சில பகுதிகள் இடம்பெறும்.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 6 முதல் கோடை விடுமுறை!
வரலாறு பாடப்பகுதியில் சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், டில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜயநகர மற்றும் பாமினி அரசுகள் மற்றும் தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு மற்றும் சில பிரிவில் கேட்கப்படும்.இந்திய அரசியல் பிரிவில் அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், ஒன்றிய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் சில பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
பொருளாதாரம் பாடத்தில் ஐந்தாண்டு திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளாண் மற்றும் வணிக வளர்ச்சி மற்றும் இந்திய தேசிய இயக்கம் சம்பந்தப்பட்ட தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பல தலைவர்கள் பங்கு மற்றும் சில கேள்விகள் கேட்கப்படும்.திறனறி வினாக்களில் தர்க்க அறிவு மற்றும் கணிதத்தை கொண்டது. இதில் சுருக்குதல் , எண்ணியல் , கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத் தொடர் , சராசரி , சதவீதம் , விகிதம் மற்றும் விகித சமம் , மீ.பெ.வ , மீ.சி.ம , தனிவட்டி , கூட்டுவட்டி , அளவியல் பாடங்களில் பரப்பளவு மற்றும் கன அளவு , வேலை மற்றும் நேரம் , வேலை மற்றும் தூரம் , வயது கணக்குகள் , இலாபம் மற்றும் நட்டம் , வடிவியல் , இயற்கணிதம் போன்ற தலைப்புகளில் இருந்து வினாக்கள் வரும்.
மாணவர்களுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
இந்த குரூப் 4 தேர்வு எழுத பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை மற்றும் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 18 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் இந்த தேர்வை எழுதலாம். தமிழ்நாடு அரசு விதிகளின் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு சலுகைகளும் உண்டு.குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்ய https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G4_Scheme_Revised_27012022.pdf இதனை கிளிக் செய்யவும்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |