TNPSC 5000+ காலிப்பணியிடங்கள் – குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே!
TNPSC 5000+ காலிப்பணியிடங்கள் – குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே!
இந்த ஆண்டிற்கான TNPSC குரூப் 2 தேர்வுகள் வரும் மே மாதம் நடத்தப்பட இருக்கும் நிலையில் இத்தேர்வுக்கு விண்ணப்பங்களை செலுத்த மார்ச் 23ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்னும் 2 நாட்களுக்குள் விண்ணப்பங்களை செலுத்த தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
குரூப் 2 தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு பொதுத்தேர்வுகளை நடத்தி ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் சுமார் 32க்கும் மேற்பட்ட TNPSC தேர்வுகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 5000க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு குரூப் 2 தேர்வு நடத்தப்பட இருக்கும் நிலையில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நாளை (மார்ச் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
இதற்கான விண்ணப்பப் பதிவு செயல்முறைகள் வரும் மார்ச் 23ம் தேதியுடன் முடிவடைய இருப்பதால் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பங்களை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது முதல்நிலை தேர்வுக்கு பிறகு காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
இந்த குரூப் 2 தேர்வின் மூலம் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பட உள்ளன. மேலும் விண்ணப்பதாரர்களுக்கு முதல்நிலைத் தேர்வு மே 21 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த நன்னடத்தை அதிகாரி தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCMs) மற்றும் BCM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
தேர்வு முறை:
- இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் நடத்தப்படுகிறது.
- அந்த வகையில் தமிழில் 100 கேள்வி, பொது அறிவில் 75 கேள்வி, ஆப்டிட்யூடில் 25 கேள்விகளும் கேட்கப்படும். ஆங்கிலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கு பொது ஆங்கிலத்தில் 100, பொது அறிவில் 75, ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும்.
- இதற்கான மொத்த மதிப்பெண் 300 ஆகும்.
- இதில் 90 மதிப்பெண்களுக்கும் குறைவான மதிப்பெண் பெறுபவர்கள் தேர்ச்சி பெறாதவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
- முதல்நிலை தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டு, முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும்.
- இதை தொடர்ந்து குரூப் 2 மெயின் தேர்வு செப்டம்பர் மாதம் மற்றும் கலந்தாய்வு 2023 ஜனவரி மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.