TNPSC ரூ.56 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 26!
TNPSC ரூ.56 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 26!
தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகமான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இதனால் வேலை இல்லாமல் அவதிபடுபவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மாதம் ரூ. 56 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை TNPSC வெளியிட்டு உள்ளது.
புதிய வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் TNPSC மூலம் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்கள் போட்டி தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டித் தேர்வுகள் கடந்த 2 வருடங்களாக நடத்தப்படவில்லை, காரணம் கொரோனா தாக்கம் ஆகும். இருப்பினும் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் தினசரி பாதிப்பு குறைந்து வருவதால் மீண்டும் போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. கொரோனா காலகட்டத்தில் நிலவி வந்த வேலையின்மையை போக்க தமிழக முதல்வர் அதிகமான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த உத்தரவு பிறப்பித்து வருகிறார்.
ஆதார் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
மேலும் TNPSC யால் நடத்தப்படும் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை அண்மையில் TNPSC தலைவர் வெளியிட்டார். இதன் அடிப்படையில் குரூப் 2, குரூப் 2A தேர்வு வரும் மே21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் TNPSC புதிய அரசு வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 26-ம் தேதி கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர்
காலியிடங்கள் எண்ணிக்கை: 29 இடங்கள்
மாத சம்பளம்: ரூ. 56,100 – ரூ. 2,05,700 வரை
விண்ணப்பதாரர் கல்வி தகுதி: முதுகலைப் பட்டம், பி.இ ஆகும் .
விண்ணப்பதாரர் வயது வரம்பு: எஸ்சி. எஸ்டி. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அனைத்து வகுப்பை சேர்ந்த விதவைகளுக்கும் வயது வரம்பு கிடையாது. மற்றவர்கள் 01.07.2022 அன்று 32 வயதை விட கூடுதல் வயதாக இருக்க கூடாது.
பதிவுக் கட்டணம்: ரூ. 150
தேர்வுக் கட்டணம்: ரூ. 200 -ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த பணி குறித்து கூடுதல் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.