TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு நாள்தோறும் மாதிரி தேர்வுகள் எங்கள் Examsdaily வலைத்தளமானது நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNPSC போட்டி தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக முழு விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மாதிரி தேர்வு
தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. மேலும் குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதில் 5529 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வும் வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதிலும் 7301 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் மாதிரி தேர்வுகள் எங்கள் Examsdaily வலைத்தளமானது நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNPSCயின் தேர்வில் இடம்பெற்றுள்ள இந்திய ஆட்சியியல் பாடப்பகுதிக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைத்தளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
TNPSC – Polity MT 02
Mock Test “WhatsApp Group” Join Now