TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவர் விளக்கம்!
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவர் விளக்கம்!
டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு பல நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாக தேர்வாணையத் தலைவர் அறிவித்துள்ளார். மேலும் டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டங்கள் ஓரிரு நாட்களில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு:
தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு வருடமும் குரூப் 1, 2 மற்றும் குரூப் 4 தேர்வு நடத்தி தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக தகுதித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு நடக்கப் போகும் தகுதித்தேர்வுக்கு எக்கச்சக்கமான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் குரூப்-2 தேர்வு மற்றும் மார்ச் மாத இறுதியில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என தேர்வாணையம் முன்பு அறிவித்திருந்தது.
அதன்படி பிப்ரவரி மாதத்தில் குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. மேலும், மே 21ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் இந்த தகுதித் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் செய்து கொண்டிருப்பதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதாவது ஓஎம்ஆர் மூலம் தேர்வு எழுதுவதால் ஏற்படும் தவறுகளை களைய டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். மேலும் டிஎன்பிசி தேர்வின்போது ஓஎம்ஆர் படிவத்தில் இருந்து தனிநபர் தகவல்கள் தேர்வு அறையிலேயே பிரித்து எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
தேர்வுக்கான வினாத்தாள் கொண்டு வரும் வாகனங்களில் முறைகேடு நடைபெறா வண்ணமும் கண்காணிக்கும் பொருட்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை கண்காணிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இப்படி பல நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதால் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் அச்சமின்றி தங்களது தேர்வினை எழுதும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள் யாருடையது என்பதை கணினி மூலமாக எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப்-4 தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கான பாடத்திட்டங்கள் ஓரிரு நாட்களில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.