TNPSC இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் அரசுத்துறை பொறியியல் சேவை பணிகளுக்கான CSE தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
CSE தேர்வு:
தமிழகம் கொரோனா மூன்றாம் அலையிலிருந்து மீண்டு வரும் நிலையில் மக்கள் தங்களுக்கான வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் வகையில் TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு 32 வகையான தேர்வு நடைபெறும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் குரூப் 2,2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் மே 21ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி விண்ணப்பபதிவுகள் நடைபெற்று வருகிறது.
மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – கண்காணிப்பில் இருந்த 6000 பேர் விடுவிப்பு!
அதனை தொடர்ந்து தற்போது TNPSC CSE ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சேவை பணிகளுக்கான தேர்வு மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆட்டோமொபைல் என்ஜினியர், ஜூனியர் எலெக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர், உதவிப் பொறியாளர், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை உதவி இயக்குநர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 626 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கான எழுத்துதேர்வு ஜூன் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.tnpsc.gov.in/ இணையதளம் வாயிலாக மே 3 விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. எழுதுத்துத் தேர்வு என்பது ஜூன் 26ஆம் தேதி தேர்வு 2 கட்டமாக காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரையில் முதல் தாளும் பிற்பகல் 2.00 மணி முதல் 5 மணி வரையில் இரண்டாம் கட்டத் தேர்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |